டில்லி:
பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

5 பேர் கொண்ட இந்த பொருளாதார ஆலோசனை குழு, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வளர்ச்சி தொடர்பான ஆலோசனைகளை பிரதமருக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் உறுப்பினரான பிபேக் தேப்ரா குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சுர்ஜித பாலா, ரதின் ராய் மற்றும் அஷீமா கோயல் ஆகியோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும், நிதி ஆயோக் முதன்மை ஆலோசகர் ரத்தன் வாடல் குழு செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel