சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஓய்வுபெற்ற ஆடிட்டர் வீட்டில். கார் டிரைவராக பணியாற்றி வந்த உசேன் என்பவர்,  தனத நண்பர்கள் சிலருடன் வந்து, அங்கிருந்த குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அங்கிருந்து,  15சவரன் நகையுடன் ரூ.7.40 லட்சம் பணத்தை யும் கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.  அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் 70வயதான தானுமல்லையா என்ற ஆடிட்டர். இவர் தனது மனைவி, மகளுடன் வசித்து வருகிறார்.  இவரது வீட்டில் கார் டிரைவராக இருந்து பவருபவர் பெரம்பூரை சேர்ந்த உசேன். இவர் இன்று காலை தானுமல்லையா  வீட்டிற்கு வந்து,  தனது குழந்தைக்கு பிறந்த நாள் என்றும் அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளதாக கூளியுள்ளார். அதைத்தொடர்ந்து உசேன் அவர்களிடம் சுவிட்பாக்ஸை கொடுத்த நேரத்தில் அவருடன் வந்த மர்ம நபர்கள் சிலர், தானுமல்லையா மகள் அருணாவின் கழுத்தில் கத்தியை வைத்து, அவர்களிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு,  பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதனால் பதறிப் போன பெருமாள் 10 ஆயிரம் தருகிறேன், எனது மகளை விட்டு் விடுமாறு கெஞ்சி உள்ளார்.  இதைக்கண்டன தானுமல்லையா  மனைவி ராமலட்சுமி உசேனை தடுக்க வந்துள்ளார். அவரது கையில் கத்தியால் வெட்டி பயமுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து, உசேன் தனது கூட்டாளிகளுடன் சர்ந்து, அவரது வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 2.40 லட்ச ரூபாய் மேலும், அதனுடன்  இருந்த 15 சவரன் தங்க நகையை எடுத்துக்கொண்டு பெருமாள் வங்கி கணக்கில் இருந்து 5 லட்ச ரூபாயை ஜி பே மூலம் விஜய் என்பவரது வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்ய சொல்லி மிரட்டி, அந்த பணத்தையும்  பெற்றுக்கொண்டுள்ளனர். பின்னர், அவர்களை செல்போனை ஒரு அறையில் போட்டுவிட்டு,  போலீசுக்கு தகவல் தெரிவித்தால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு தப்பி சென்றனர்.

இதைத்தொடர்ந்த தானுமல்லையா குடும்பத்தினர் கூச்சலிட்டனர். உடனே திரண்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குமரன் நகர் போலீசார்,  அவர்களிடம்  விசாரணை நடத்தினர். பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கார் ஓட்டுநர் உசேன் மற்றும் அவனது கூட்டாளிகளை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

இன்று காலை பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் பரபரப்பைளம், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறையும், நீதித்துறையும் செயலிழந்து விட்டதோ என்ற சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.