download

டில்லி:  பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம்  கொண்டு வரவேண்டும்’ என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
‘‘குழந்தைகள், சிறுவர்களின் முக்கிய உணவாக இருக்கும் பாலில், கலப்படம் செய்பவர் களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்க வேண்டும்’’ என்று பலரும்,  உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.   இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஆர்.பானுமதி, யூ.யூ.லலித் ஆகி யோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் அனுராக் தோமர் ஆஜரானார்.
பாலில் கலப்படம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், நேற்று வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
“பாலில் கலப்படம் செய் பவர்களுக்கு ஆறு மாதம் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில்தான் தற்போது சட்டம் உள்ளது. அந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். குழந்தைகள், சிறுவர்களின் முக்கிய உணவாக இருப்பது பால் தான்.  அதில் செயற்கை பவுடர்கள், ரசாயனங்கள் கலந்து விற்பனை செய்வது உயிருக்கே கேடாகும்.   இது எதிர்கால சந்ததியினரை மிகவும் பாதிக்கும்.
எனவே, பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சட்டத் திருத்தம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.  இந்த விஷயத்தில் உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே சட்டத் திருத்தம் கொண்டு வந்துவிட்டன. . அந்த மாநிலங்களை பின்பற்றி மத்திய அரசும் மற்ற மாநிலங்களும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண் டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதில் தவறில்லை.
மேலும் கலப்பட பால் உயபோகிப்பதால்  ஏற்படும் விளைவுகள் குறித்து நாடு முழுவதும் மத்திய அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கலப்படத்தை எளிதில் கண்டறியும் வழிமுறைகளையும் பயிற்சி பட்டறைகள் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.