
லாஸ் ஏஞ்சல்ஸ்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் தான் போட்ட ஒப்பந்தத்தை பரிசோதிக்கக் கோரி ஒரு நீலப்பட நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்க நாட்டை சேர்ந்த ஸ்டார்மி டேனியல்ஸ் என்னும் நடிகை பாலியல் படங்களில் நடிப்பவர். அவருடைய உண்மைப் பெயர் ஸ்டீபனி கிளிஃபோர்ட். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் கடந்த 2016ஆம் வருடம் நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்பு தான் ஒரு அந்தரங்க ஒப்பந்தம் போட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் ட்ரம்ப் உடன் தாம் பாலியல் உறவு கொண்டுள்ளதாகவும் இருவருக்கும் இடையில் ஒரு இணைபிரியா நட்பு இருந்ததாகவும் நடிகை கூறி உள்ளார். மேலும் தங்களிடையே காதல் உறவு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அதிபரின் வழக்கறிஞர் மைக்கேல் கோகன் இதை மறுத்துள்ளார்.
மைக்கேல், “அதிபர் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே நடிகைக்கு 130000 அமெரிக்க டாலர்கள் தனது சொந்தப்பணத்திலிருந்து அளித்துள்ளார். மேலும் இருவருக்கும் இடையில் எந்த வித காதல் உறவும் இல்லை. அந்த ஒப்பந்தத்தில் ட்ரம்ப் நேரடியாக கையெழுத்து இடாததால் அந்த ஒப்பந்தம் செல்லாது” என தெரிவித்தார்.
இன்று இதை எதிர்த்து நடிகை லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அவர் தனது வழக்கு மனுவில், “அந்த ஒப்பந்தம் செல்லாது என்பது தவறான தகவல். எனவே இந்த நீதிமன்றம் இது குறித்து விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். வழக்கை ஏற்ற நீதிமன்றம் வழக்கறிஞர் மைக்கேல் கோகன் இது குறித்து எதுவும் பேசக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
[youtube-feed feed=1]