டெல்லி: இளம் பெண்கள் பாலியல் இச்சைகளை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்ப்பளித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை ரத்து செய்ததுடன் நீதிபதி களையும் கடுமையாக விமர்சனம் செய்தது
மேலும், பாலியல் பலாத்கார வழக்கில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை விடுவித்த உத்தரவை ரத்து செய்ததுடன், அவரது தண்டனையையும் உறுதி செய்தது.

மேற்கு வங்கத்தில், சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து குற்றவாளி தரப்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்தகாெல்கதத்தா உயர்நீதிமன்றம் நீதிபதிகள் சித்தரஞ்சன் தாஸ், பார்த்தசாதி சென் அமர்வு , ‘இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் ஆண், முழு சம்மதத்துடன் உறவில் ஈடுபட்டுள்ளனர். ‘எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் வயதை பொருட்படுத்த தேவையில்லை’ என, கூறி குற்றவாளியை கடந்த ஆண்டு (2023) அக்., 18ல் விடுவித்தது. அதோடு, பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்படும் பெண்களுக்கு அறிவுரைகளையும் வழங்கியது.
அதனப்டி, இளம் பெண்கள் தங்கள் பாலியல் இச்சைகளை கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிட சுகத்துக்காக தங்களையே இழக்க துணியும் பெண்கள், இந்த சமூகத்தின் பார்வையில் தவறானவர்களாக பார்க்கப்படுவர். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதுபோல கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க அரசும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான்அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தீர்ப்பில், இளம்பெண்கள் தங்களது பாலியல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறிய உயர்நீதிமனற் நீதிபதிகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அதிரடியாக ரத்து செய்து அறிவித்தது.
மேலும், போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்தது.
[youtube-feed feed=1]