சென்னை
சமீபத்தில் மறைந்த மதுசூதனன் மருத்துவச் செலவுக்காக அதிமுக ரூ.26.74 லட்சம் செலவு செய்துள்ளது.

அதிமுக அவை முன்னவர் மற்றும் மூத்த தலைவரான மதுசூதனன் கடந்த 5 ஆம் தேதி அன்று அப்பல்லோ மருத்துவமனையில் உயிர் இழந்தார். இதையொட்டி இன்று அவருக்கு அதிமுக சார்பில் இரங்கல் தீர்மானம் இயற்றப்பட்டது.
மேலும் அண்ணா திமுக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மதுசூதனன் அவர்களுடைய மருத்து சிகிச்சைக்கான மொத்த தொகை ரூ.,26,74,063 ரூபாய் ஆகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அந்த தொகை அப்பல்லோ மருத்துவமனைக்கு அதிமுக செலுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel