சென்னை:

அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டப்போவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளதை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக அமைச்சர்கள், டிடிவி தினகரனை கட்சியைவிட்டு நீக்குவதாக அறிவித்துள்ளதை அடுக்கு அக் கட்சியில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை இன்று மாலை கூட்ட இருப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

அவர் கட்சி அலுவலகத்தைக் கைப்பற்றுவதைத் தடுப்போம் என்று அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.\

இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து  அதிமுக தலைமையகத்தில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]