சென்னை
இன்று விலைவாசி உயரவைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பட்டம் நடத்த உள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த விலைவாசி உயர்வால் அனைத்து மாநில மக்களும் கடும் துயருக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இன்று தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிமுக சார்பில் அனைத்து ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் விலைவாசி உயர்வு காரணமாகச் சாதாரண ஏழை, எளிய மக்கள் வாழவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel