திருவள்ளூர்

மிழகத்தில் குறைவான அளவிலான மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டதற்கு முந்தைய அதிமுக அரசே காரணம் என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா மூன்றாம் அலை பரவல் காரணமாகத் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.   கொரோனா பரவலில் அகில இந்திய அளவில் தமிழகம் 5 ஆம் இடத்தில் உள்ளது.   ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கையில் 9 ஆம் இடத்தில் உள்ளது.

நேற்று திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தின் சமூக பங்களிப்பு நிதியின் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு 47 லட்ச ரூபாய் மதிப்பில் எக்ஸ்ரே ஆய்வக கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பால்வளத்துறை அமைச்சர் சா மு நாசர் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தமிழகத்தில் 2 கோடியே 60 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது., முந்தைய அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடும் போது, தினசரி மூன்று மடங்கு அதிகமாகத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது..  தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கையில் தமிழகம் 9 ஆம் இடத்தில் இருப்பதற்கு முந்தைய ஆட்சியே காரணம் ” எனத் தெரிவித்துள்ளார்.