விழுப்புரம்
சின்ன சேலம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவத்துக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் பலரும் தண்டனை பெற்றுள்ளது தெரிந்ததே. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனைப் பெற்று சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 1991 முதல் 1996 ஆம் ஆடுவரை சின்ன சேலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பரமசிவம் அதிமுகவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தனது பதவிக் காலத்தின் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை நீதிபதி இளவழகன் விசாரித்து வந்தார். இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.