சென்னை
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகம் எங்கும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. தமிழக அரசு இந்த பரவலைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
நேற்று நள்ளிரவு அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி லேசான காய்ச்சல் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.