சென்னை
கொரோனா கட்டுப்பாட்டுக்காக அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு வரத் தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் 15 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
முதல்வர் இதையொட்டி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஊரடங்கு விதிகளைக் கடுமையாக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதையொட்டி தற்போது மாநிலத்தில் கொரோனா விதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. காரணம் இன்றி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் விட்டு மாநிலம் செல்வோருக்கு இ பதிவு முறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது. இதில் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தற்போதைய சுகாதார அமைச்சர் எழிலன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்
இந்த ஆலோசனை குழுவில் உள்ளோர் விவரம் வருமாறு
- தி மு க – மருத்துவர் நா எழிலன்
- அதிமுக – மருத்துவர் சி விஜயபாஸ்கர்
- காங்கிரஸ் – ஏ எம் முனிரத்தினம்
- பா ம க – ஜி கே மணி
- பா ஜ க – நயினார் நாகேந்திரன்
- ம தி முக – மருத்துவர் சதன் திருமலைக்குமார்
- வி சி க – எஸ் எஸ் பாலாஜி
- மார்க்சிஸ்ட் – நாகை மாலி
- கம்யூனிஸ்ட் – ராமச்சந்திரன்
- ம நே ம – ஜாவஹிருல்லா
- கொ ந ம தே – ரா ஈஸ்வரன்
- த வா க – தி வேல்முருகன்
- புரட்சி பாரதம் – ஜெகன் மூர்த்தி