சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வில் இதுவரை 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று இதுவரை நடைபெற்ற இந்த முதல் சுற்று கலந்தாய்வில் இதுவரை 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. முத்ல் சுற்று கலந்தாய்வில் 39,145 பேர் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக விண்ணபித்தவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில், 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் ஜுன் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 27ந்தேதி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்டு 26ந்தேதி வரை நடைபெற உள்ளது.
ஏற்கவே 7ந்தேதி முதல் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வந்த நிலையில், ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19 பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 11,359 மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 23-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். தற்காலிக ஆணை பெற்றவர்கள் ஜூலை 23-க்குள் உதவி மையம் சென்று சேர்க்கையை உறுதி செய்யவேண்டும். ஜூலை 23-க்குள் சேர்க்கையை உறுதி செய்யாதவர்களின் இடங்கள் காத்திருப்பில் உள்ளவர்களுக்கு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் ஆக. 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 20ல் நிறைவு பெறுகிறது.