சென்னை: அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில், நடப்பாண்டுக்கான உயல்கல்வி படிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், பொறியியல், மருத்துவ கலந்தாய்வு முடிந்தும், வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்கள் இல்லாத வகையில் நிரப்பப்படும். மாணவர் சேர்க்கையாக இருந்தாலும், கல்லூரி கட்டிடம் கட்டுவதாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறினார்.
Patrikai.com official YouTube Channel