திருவனந்தபுரம்:

திவாசி இளைஞன் ஒருவர் கேரளாவின் அடப்பாடி பகுதியில்,  அந்த பகுதி மக்களால் திருட்டு பட்டம் சூட்டப்பட்டு அடித்து கொல்லப்பட்டு, அது குறித்து சமூக வலைதளங்களில் படங்கள் பதிவிடப்பட்டது.

இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து கேரள முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆதிவாசி இளைஞனை அடித்து கொன்றது, மிருகத்தனமான செயல் இது புத்திசாலித்தனமான சமுதாயத்திற்கு பொருந்தாது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பிரனாயி விஜயன்  பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அடப்பாடியில் நடைபெற்ற சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், இதுகுறித்து உடனே கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்ட தாகவும், அதையடுத்து,  ஆதிவாசி இளைஞன் கொல்லப்பட்ட சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய மிருகத்தனமான செயல்கள் புத்திசாலித்தனமான சமுதாயத்திற்கு பொருந்தாது என்றும், “இத்தகைய சம்பவங்கள் சமூக-கலாச்சார முன்னேற்றத்தை நாம் அடைந்துவிட்டோம் என்று கூறிக்கொண்டிருக்கிறோம். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாததை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று கூறி உள்ளார்.

மேலும், கொல்லப்பட்ட மது என்ற ஆதிவாசி இளைஞன் கடுகுமண்ணா பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கே. பாலன்.

இந்த சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளருக்க உத்தரவிட்டு உள்ளதாக கூறி உள்ளார்.

இதற்கிடையில்,  பொதுமக்களால் அடித்துக்கொல்லப்பட்ட மதுவின் உடல் இன்னும் தங்களுக்கு கடைக்க வில்லை என்று மதுவின் உறவினர்களான ஆதிவாசி மக்கள் தெரிவித்துள்ளதாக மலையாள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஆதிவாசி இளைஞனின் அம்மா மல்லி  கூறுகையில்,  தனது மகன்  மது மனநலம் சரியில்லாதவர் என்றும், அவருக்கு 27 வயதாகிறது என்றார். கடந்த வியாழக்கிழமை பலர் வந்து அவரை எங்களிடம் இருந்து அழைத்து சென்றதாகவும், அதன்பின்னரே அவரை அடித்து கொன்றுள்ளனர் என்றும் கூறி உள்ளார்.

ஆதிவாசி இளைஞன் அந்த பகுதி மக்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.