
அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அருவி. அதிதி பாலன் நாயகியாக நடித்திருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். நடிகை அதிதி பாலனுக்கு சில விருதுகளும் கிடைத்தது.
இந்நிலையில், பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கும் கோல்ட் கேஸ் என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார் அதிதி பாலன். இந்த படத்தின் படிப்பிடிப்பு கேரளாவில் சில நாட்களுக்கு முன் தொடங்கி இருக்கிறது. இந்தப் படத்தை தனு பலக் இயக்குகிறார்.
[youtube-feed feed=1]