டில்லி

குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிப்பு குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் சி இ ஓ ஆதார் பூனாவாலா மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசி உள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்டு வரும் உலகத்தினருக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்து வருகிறது.  இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குரங்கு அம்மை நோய் தொற்றின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.  இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ ஆதார் பூனாவாலா ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சமீபத்தில் சந்தித்த பிறகு இந்த கருத்துக்களை அவர் கூறி உள்ளார்.

ஆதார் பூனாவாலா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ”மத்திய அமைச்சருடனான எனது சந்திப்பு எப்போதும் போல் சிறப்பாக இருந்தது. குரங்கு அம்மை தடுப்பூசிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.