இந்தப் பயோமெட்ரிக் கைரேகை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்ட்தால், பல்வேறு மக்கள் அடிப்படைத் தேவையான அரிசி, மண்ணெணை,சீனி கூட வாங்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேர்கின்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி-யில் நாம் பார்த்த ஒரு அரசு நியாயவிலைக் கடையில் , 10 வயது மதிக்கத் தக்க கைரி டிடு எனும் சிறுமி தந்து பள்ளிச் சீருடையுடன் வரிசையில் காத்திருந்தாள், அவளிடம் அணிவதற்கு அதைவிட சிறந்த ஆடை இல்லை. அவளது தந்தையும் தாயும், பிரதமர் மோடியின் “பணமதிப்பிழக்க” நடவடிக்கையின் காரணமாக வேலைவாய்ப்பு இழந்து வறுமையில் சுழல்வதால், பிழைப்பிற்காக அருகில் உள்ள ஹசாரிபாக் நகரத்திற்கு சென்றுவிட்டதால், சிறுமி கைரி டுடு ரேசன் பொருட்கள் வாங்கவேண்டிய கட்டாயம்.
வரிசையில் காத்திருந்த சிறுமிக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை.
அவளிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தோம், ஆரம்பத்தில், பேசத் தயங்கினாலும், பின்னர் நம்மிடம், எவ்வாறு தமது குடும்பத்திற்கு ரேசன் பொருட்கள் மறுக்கப்படுகின்றன என்பதை கண்ணீருடன் விளக்கினாள்.
“எங்க அப்பா அம்மா வேலைக்குச் சென்று விட்டதால், ரேசன் வாங்க நான் தான் வரவேண்டியதாய் இருக்கு. ஆனால், பயோமெட்ரிக் கைரேகை சரிபார்ப்பில் என் கைரேகை ஏற்றுக்கொள்ளப் படவில்லை. இதனால் எங்களுக்கு ரேசன் பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளது” என்றார் வேதனையுடன்.
அரசின் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டியது தங்களின் கடமை என்று ரேசன் ஊழியர்கள் தமது கையை விரித்துவிட்டனர்.
நாம் சந்தித்த கரண் மேத்தா (ஆதார் அட்டை எண் 202xxxxxxx22), யசோதா குமாரி (எண் 202xxxxxxx14), பகல் மேத்தா (எண் 202xxxxxxx75), லெப்டா முண்டா (இல்லை 202xxxxxxx82) ஆகியோரும் தங்களின் துயரத்தைப் பகிர்ந்துக் கொண்டனர்.
ஜார்க்கண்ட் அரசின் வலைத்தளத்தில் “பொது விநியோக அமைப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மக்களின் ரேசன் மறுப்பு துயரத்தின் சாட்சியாய், அதன் விவரங்கள் உள்ளன. இவ்விவரப்படி, கடந்த மூன்று மாதங்களில், பெருவாரியான ரேசன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது. நாம் சந்தித்த மக்களுள்ள குந்தி பகுதியில், கடந்த மாதத்தில் வெறும்73% அரிசி மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், மக்கள் இதுகுறித்து புகார் அளித்தபோது, ஒரு அதிகாரி, “இந்தப் பயோமெட்ரிக் முறை தோற்பது சர்வ சாதாரணமான ஒன்று. இணைய இணைப்புப் பிரச்சனை, டேட்டாபேஸில் தவறான தகவல் சேர்ப்பு, போன்ற பல காரணங்களுக்காகச் சர்பார்ப்பு தடை படுகின்றது. எங்களுக்கு மக்களின் கஷ்டம் புரிகின்றது. எங்களால், இந்த நபர் தானெனத் தெரிந்திருந்தும், அவர்களுக்குப் பொருட்கள் வழங்க முடியாதது, எங்களின் கையறு நிலையைக் காட்டுகின்றது என்றார்.
டிர்லா கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பெலாஹத்தி, சிம்புக்கெல், சரித்கெல் மற்றும் தொடாங்கெல் கிராமங்களில் நட்த்தப்பட்ட களஆய்வு முடிவில், 225 குடும்பங்களில், 40 குடும்பங்களுக்கு ரேசன் பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் 100 குடும்ங்களுக்கு தமது பயோமெட்ரிக் கைரேகை சர்பார்ப்பில் பல குழப்பங்கள் சந்தித்தனர். அவர்களின் நேரம் பெருமலவில் வீணடிக்கப்பட்டு அலைகழிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
பயோமெட்ரிக் முறை குறித்தான கூட்ட்த்தில் கலந்துக் கொண்ட மக்கள் தங்களது கஸ்ட்த்தை தெரிவித்து மிகுந்த கொந்தளிப்புடன் காணப்பட்டனர்.
மத்திய பிரதேச அரசு ஆஃப்லைன் முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றது.
பேற்கு வங்க அரசு ஸ்மார்ட் கார்ட் பயன்படுத்திய ரேசன் பொருட்கள் விநியோகித்து வருகின்றது.
பெருவாரியான ஜார்க்கண்ட் மக்கள், வெளிமாநிலங்களில் கூலித்தொழிலாளர்களாய் இடம்பெயர்ந்துள்ள நிலையில், மத்திய அர்சு ஆதார்- கைரேகை சரிபார்ப்பை வலிந்து திணிப்பது, மக்கள் நலனுக்கு எதிரானது. அவர்களின் அடிப்படை உரிமையைத் தட்டிப் பறிப்பதாகும்.
இம்மக்களின் துயர் துடைக்க அரசு இணையத்தை மட்டுமே நம்பாமல், நேரில் சரிபார்த்து ரேசன் பொருட்கள் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்பதே இம்மக்கள் மற்றும் ரேசன் ஊழியர்களின் கோரிக்கை. அரசு செவிச் சாய்க்குமா?