சென்னை: தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஊரடங்கு 21ந்தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கலாம் என முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரங்கு வரும் திங்கட்கிழமை காலை 6ணி உடன் முடிவடையவதால், மேலும் ஊரடங்களை நீட்டிப்பது குறித்த முதல்வர் ஸ்டாலின், இன்று மருத்துவ நிபுணர்களுடன்  ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து அரசு உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

இந்தஆலோசனைக் கலந்துகொண்ட நிபுணர் குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தடுப்பூசியை அதிகப்படுத்துவது, அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள், சமூக விலகல், முகக்கவசம் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதே தொற்றை மேலும் குறைக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.