திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கூடுதல் வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வாகன நிறுத்துமிடத்தில் 450 இருசக்கர வாகனங்கள் மற்றும் 25 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி உள்ளது.
ஏற்கனவே 1100 இருசகர வாகனங்கள் நிறுத்த இந்த ரயில் நிலையத்தில் இடவசதி உள்ளது.
இருந்தபோதும் பயணிகளின் தேவை அதிகரித்து வருவதையடுத்து இந்த கூடுதல் வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வாகன நிறுத்தம் திருமங்கலம் மெட்ரே ரயில் நிலையம் அருகில் 200 மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது.