சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த இரண்டு நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர்.

சென்னை  உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் பரிந்துறை செய்தது. இதை ஏற்று மத்திய சட்ட அமைச்சகம், குடியரசு தலைவரின் அனுமதிக்க அனுப்பியது. இதை ஏற்று, குடியரசு தலைவர் அதற்கான உத்தரவை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து  கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக  மார்ச் 10ந்தேதி அன்று  பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மொத்தம் 75 நீதிபதிகள் கொண்ட அமர்வில், தற்போதுவரை 65 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளது. இன்னும்   10 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.