சென்னை: சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைளுட்ன் கொரோனா தடுப்பு மையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் மேலும் 500 படுக்கைகள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சேலம் இரும்பாலை வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை, சேலத்தில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், கொரோனா மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சை மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகளையும், ஆக்சிஜன் வசதிகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, அங்கு மேலும் மேலும் 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்து குறித்து முடிவு செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினார். அதன்படி, இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், நேற்று திறந்து வைக்கப்பட்ட சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையில்,கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.