சென்னை:
புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,872 மில்லியன் கன அடி நீர் உள்ளது. புழல் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் 13.5 கி.மீ. தூரம் சென்று எண்ணூரில் வங்கக்கடலில் கலக்கிறது. நீர்வரத்து 1,487 கன அடியாக உள்ள நிலையில் குடி நீருக்காக 191 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
உபரி நீர் செல்லும் கால்வாய் வழியே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.