சென்னை: குரூப் 2, 2ஏ தேர்வுகளில் கூடுதலாக 213 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஏற்கெனவே 2,327 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2540 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. அதன்படி, குரூப் தேர்வுகளை அவ்வப்போது நடத்தி, காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. உதவி ஆய்வாளர், துணை வணிகவியல் அலுவலர், சார்பதிவாளர் நிலை 2 தனிபிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்2 தேர்வுகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான கூடுதல் காலி பணியிடங்கள் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2540 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரக்கூடிய நிலையில் தற்போது கூடுதலாக இந்த தேர்வுகளில் 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக தற்பொழுது 213 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வருங்காலத்திலும் பல்வேறு தேர்வுகள் அடுத்தடுத்து நடைபெறும் போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி இடங்களுடன் கூடுதலாக சில காலி இடங்கள் சேர்க்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.