சென்னை:
அதானியின் தாம்ரா துறைமுகத்தில் இருந்து கட்டாயம் 30% நிலக்கரி கொண்டு வர வேண்டும் என்று அதானி நிறுவனத்துக்கு ஆதரவாக மத்தியஅரசின் என்எல்சி நிறுவனம் வெளியிட்ட டெண்டர் நிபந்தனைக்கு தடை சென்னை உயர்நீதி மன்றத்தில் மதுரை கிளை தடை விதித்து உள்ளது.
தமிழகத்தின் மின்தேவைக்காக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குச் சொந்தமாக வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன. இங்கு தேவைப்படும் நிலக்கரி மத்திய அரசு மூலம் மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் இருந்து மின்சார வாரியம் வாங்கி வருகிறது.
மழைக்காலங்களில் அங்கிருந்து போதுமான நிலக்கரி கிடைக்காத நிலையில்,வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கோரியது. இதில் என்எல்சி நிறுவனம் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.
அதன்படி, தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் நிலக்கரி தொடர்பான டெண்டரில் என்எல்சி நிறுவனம் சில நிபந்தனைகளை விதித்து. அதன்படி, அதானியின் தாம்ரா துறைமுகத்தில் இருந்து கட்டாயம் 30% நிலக்கரி கொண்டு வர வேண்டும் என்று அதானி நிறுவனத்துக்கு ஆதரவாக என்எல்சி நிறுவனம் செயல்பட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், என்எல்சியின் டெண்டர் நிபந்தனைக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் மதுரை கிளை தடை விதித்து உள்ளது.