டெல்லி: நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதை ஏற்க சபாநாயகர் மறுப்பதால், அவை எதிர்க்கட்சி எம்.பிக்களால் முடக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 5 நாட்கள் அவை முழுமையாக முடக்கப்பட்ட நிலையில், இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் இந்திய தொகுதி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு., ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் அதானி விவகாரம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.