பெங்களூரு:

கவுதம் அதானி தலைமையிலான அதானி குரூப்பில் உள்ள நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளாக எப்படி வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருவாய் துறையின் வருவாய் நுண்ணறிவு பிரிவு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது.
டைமண்ட் மற்றும் தங்க நகைகளை வெட்டி, பாலிஷ் செய்து மேற்கொண்ட வர்த்தகத்தில் தான் இத்தகைய மோசடி நடந்துள்ளது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது குறித்து அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு அதானி நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல தீர்ப்பாயங்கள், நீதிமன்றங்களில் அதானி குழுமத்திற்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான கேள்விகளை பொருளாதாரம் மற்றும் அரசியல் வார இதழ் ஒன்று, அருண்ஜேட்லி மற்றும் அவரது துறையை சேர்ந்த 5 உயரதிகாரிகள், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் அயல்நாட்டு வர்த்தக இயக்குனரகம், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், அதானி ஆகியோருக்கு இ.மெயில் மூலம் கடந்த நவம்பர் 18ம் தேதி அனுப்பியது.
இதில் அதானி செய்தி தொடர்பாளர், சட்ட அமைச்சர் மட்டுமே பதில் அனுப்பியிருந்தனர். மற்றவர்கள் இதற்கு தற்போது வரை பதிலளிக்கவில்லை.
இந்த நிறுவனங்களில் மோசடி சுருக்கமாக இங்கே கொடுக்கப்படுகிறது….

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதிக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு திட்டங்களை அதானி குழுமம் தவறாக பயன்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனங்களுக்கு சுழற்சி முறையில் ஏற்றுமதி செய்து பெரிய அளவில் மோசடி செய்துள்ளது.

செயற்கையாக ஏற்றுமதி செய்தது போல் ஆவணங்களை தயார் செய்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மூலம் வழங்கப்படும் சர்வதே ஏற்றுமதி திட்டங்கள் மூலம் சலுகைகளையும், ஊக்கத் தொகைகளையும் அனுபவித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

2003& 2004ம் ஆண்டில் ‘‘வர்த்தக இல்லம்’’ என்ற அமைப்பு கார்பரேட் ஏற்றுமதி நிறுவனங்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் பெரிய அளவில் ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் திட்டம அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் சேர அதான நிறுவனம் உலகில் உள்ள 45 நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு செயற்கையான ஏற்றுமதியை கையாண்டு இந்த திட்டத்தில் உள்ள சாதக அம்சங்களை பயன்படுத்திக் கொண்டதும் அம்பலமாகியுள்ளது.

2002&2003ம் ஆண்டில் மொத்மம் 412 கோடி ரூபாய்க்கு தங்கம் மற்றும் வைரம் ஏற்றுமதி செய்து வந்த அதானி நிறுவனம், இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு 2003&24ம் ஆண்டில் 6,203 கோடி ரூபய்க்கு ஏற்றுமதி செய்திருப்பதாக ஆவணங்கள் தெரிவகின்றன.

20 சதவீதம முதல் 25 சதவீதம் வரையிலான ஏற்றுமதி வளர்ச்சிக்கு 5 சதவீதமும், 25 முதல் 100 சதவீதத்திற்குள்ளான வளர்ச்சி 10 சதவீதமும், 100 சதவீதத்துக்கு மேலான வளர்ச்சிக்கு 15 சதவீத வரி விலக்கும் அளிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறும் சலுகையை அனுபவிக்க தான் செயற்கையான ஏற்றுமதியை கையாண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல தகிடுதித்தோம் வேலைகளை தொழில்நுட்ப ரீதியாக மேற்கொண்டு தான் கோடி கணக்கான ரூபாயை அதான குழுமம் சுருட்டியுள்ளது.
இதை கண்டுபிடித்த வருவாய் நுண்ணறிவு பிரிவினர் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர். அதானி குழுமத்துடன் நெருக்கமாக இருக்கும் பிரதமர் மோடி, இந்த புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தலையிடாமல் இருந்தால அதானயில் முழு மோசடியும் அம்பலமாகும் என்பதில சந்தேகமில்லை. ஆனால் இது நடக்குமா…?