ஷண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், மந்த்ரா பேடி, சுரபி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘அடங்காதே’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் இந்தப் படத்தின் வெளியீடு பலமுறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

‘அடங்காதே’ திரைப்படத்தை தணிக்கை குழுவினருக்கு திரையிட்ட காட்டிய போது, படத்தில் நடிகர் ரஜினி கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷயங்களை கிண்டலடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருந்ததிற்கு எதிர்ப்பு தெரித்துள்ளனர். இதனால் ‘அடங்காதே’ திரைப்படத்தை மறு தணிக்கைக்கு கொண்டு சென்றுள்ளனர் படக்குழுவினர்.

10 நிமிடங்களுக்கு மேல் உள்ள சர்ச்சை காட்சிகளை வெட்டி தூக்கி விட்டு ‘அடங்காதே’ திரைப்படத்திற்கு யூஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

 

[youtube-feed feed=1]