மும்பை:
இந்தியாவில் உண்மையான கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என்று நகரத்தின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் தனு சிங்கால் தெரிவித்துள்ளார்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மீது நிறைய நம்பிக்கை உள்ளது என்றாலும், தொற்று நோய் நிபுணர் டாக்டர் தனு சிங்கால் கூறுகையில், அவர்கள் எந்த குறிப்பிடத்தக்க நன்மையையும் கவனிக்கவில்லை கொரோனா மகாராஷ்டிராவைத் தாக்கி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. மும்பை இப்போது நாட்டில் வெடிப்பின் மையமாக மாறியுள்ளது. இங்கு கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,000-த்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து நகரத்தின் முன்னணி தொற்று நோய் நிபுணர், கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் தனு சிங்கால் பேசிய போது, கொரோனா குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
கேள்வி: இந்த நோய் இப்போது நகரத்தில் ஒரு மாதமாக உள்ளது. வைரஸ் மற்றும் அதன் நடத்தை பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?
பதில்: நாங்கள் எதிர்பார்த்தது போலவே கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இதில் பெரும்பாலனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
முதியவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பு அதிகம் என்றாலும், ஆரோக்கியமான மற்றும் இளைஞர்கள் சிலரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளது வருத்தமளிக்கிறது.
இந்த வைரஸால் ஏற்படும் மறைமுக சேதம், நேரடி சேதத்தை விட அதிகம். ஊரடங்கு கடுமையான சமூக மற்றும் நிதி விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, மேலும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேள்வி: மற்ற நாடுகளில் காணப்பட்டதை விட இந்தியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறீர்களா?
பதில்: இல்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் காணப்பட்ட பாதிப்புகளை போன்று நாம் இந்தியாவில் காணப்படவில்லை. இது காலநிலை நிலைமைகள் மற்றும் நோயெதிர்ப்பு மறுமொழியின் வேறுபாடு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இருப்பினும், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது.
கேள்வி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகப்பெரிய சவால்கள் யாவை?
பதில்: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த நோய் தொற்று சுகாதாரப் பணியாளர்களுக்கும் பரவி வருவது கவலையளிக்கிறது.
கேள்வி: லேசான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும், நோயுற்ற நிலைமைகளின் காரணமாக முக்கியமானவர்களையும் நிர்வகிக்க நீங்கள் பயன்படுத்தும் முன்னணி சிகிச்சை முறைகள் பற்றி தெரிவிக்க முடியுமா?
பதில்: லேசான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அசித்ரோமைசினுடன் அல்லது ஈ.சி.ஜி செய்த பிறகு, ஹைட்ராக்ஸி குளோரோகுயினைப் பயன்படுத்துகிறோம். இந்த நோயாளிகளுக்கு நிமோனியாவின் அறிகுறிகள் / அறிகுறிகளைக் கண்டறிய, குறிப்பாக அவர்கள் வயதானவர்களாகவோ அல்லது இணை நோயுற்றவர்களாகவோ இருந்தால் நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். நோயாளிகளை கண்டறிய அவர்களின் இரத்த மாதிரி மற்றும் சி-ரியாக்டிவ் புரத அளவுகளையும் நாங்கள் கண்காணிக்கிறோம். லேசான அறிகுறிகளைக் கொண்ட சில நோயாளிகள் ஏழு எட்டு நாட்களுக்குப் பிறகும் மோசமடைகிறார்கள், எனவே நீண்டகால கண்காணிப்பு முக்கியம்.
நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் மூச்சுத் திணறல் மற்றும் இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்த அளவிலேயே இருக்க்கும். இந்த நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகிய முறைகளை கொண்டு சிகிச்சை அளிக்கிறோம். மூன்று முதல் ஏழு நாட்களுக்கு கார்டிகோஸ்டீராய்டுகளின் மிதமான அளவில் கொடுத்து சிகிச்சையை தொடங்குகிறோம்.
கேள்வி: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா பாதிப்பை குறைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது. இது உங்கள் நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறதா?
பதில்: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மூலம் குறிப்பிடத்தக்க நன்மை எதைவும் ஏற்பட்டு விடவில்லை. மாநிலம் முழுவதும், பல நோயாளிகள் மூன்றாம் நிலையை அடந்த பின்னரே சிகிச்சைக்கு அனுமதிப்படுகின்றனர். மேலும், அவர்கள் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இறந்துவிட்டனர்.
கேள்வி: இந்திய நோயாளிகளில் நோயின் வெளிப்பாடுகள் குறித்து விசித்திரமான ஏதாவது இருக்கிறதா?
பதில்: இல்லை, இது மற்ற நாடுகளிலும் காணப்படுகிறது. நோய்வாய்ப்பட்ட நோயாளிகளைப் பராமரிப்பதில் எந்த தாமதமும் இல்லாமல் பார்த்து கொள்வது ஆபத்தில் முடியும்.
கேள்வி: மும்பையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை பார்க்கும் போது, இயல்புநிலையின் எவ்வளவு விரைவில் திரும்பும் என்பதை எதிர்பார்க்கலாம்?
பதில்: இதை எங்களால் கணிக்க முடியாது. இது நாளுக்கு நாள் மாறி வருகிறது.
Courtesy: The Hindu