ண்டன்

திகாரப்பூர்வமாக அறிவிப்பதை விடப் பாதி அளவு கொரோனா மரணங்களே நிகழ்ந்திருக்கும் என உலக சுகாதார மைய முன்னாள் தலைவர் கரோல் சிகோரா தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இதுவரை 2.95 லட்சத்துக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு உலக அளவில் கொரோனா பாதிப்பில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.  அதே வேளையில் இங்கு மரணமடைந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 41700ஆக உள்ளது.  இது உலக அளவில் மூன்றாம் இடமாகும்.  அமெரிக்கா முதல் இடத்திலும் பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

உலக சுகாதார மையத்தின் முன்னாள் தலைவரான பேராசிரியர் கரோல் சிகோரா, “பிரிட்டனைப் பொறுத்தவரை மக்கள் பல வித காரணங்களால் உயிர் இழந்து வருகின்றனர்.  இவர்களில் பெரும்பாலானோரின் மரணத்துக்குக் காரணம் கொரோனா என மருத்துவர்கள் மரணச் சான்றிதழ்களில் குறிப்பிட்டு விடுகின்றனர்.

இதனால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 41000 ஐ தாண்டி உள்ளது.  உண்மையில்  கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை இதில் பாதி அளவு மட்டுமே இருந்திருக்கும்.  வழக்கமாக ஒரே விகிதத்தில் மரணமடைந்தோர் மற்றும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகையில் திடீர் திடீர் என மாறுதல் ஏற்படுவது சந்தேகத்தை உண்டாக்குகிறது.

மேலும் சமீப காலமாகப் புற்றுநோயால் மரணமடைவோர் எண்ணிக்கை 60%க்கும் மேல் குறைந்துள்ளது.  எனவே இவர்களில் பலர் புற்று நோய்க்குச் சரியான சிகிச்சை அளிக்காததால் உயிர் இழந்து அதற்குப் பதிலாக கொரோனா எனக் காரணம் காட்டப்பட்டிருக்கலாம்.  வருட இறுதியில் மொத்த மரணமடைந்தோர் எண்ணிக்கை வெளி வரும்போது இது சரியாகத் தெரியவரும்.

கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை கோடைக் காலத்தில் அதிகரித்துள்ளது.    எனவே கோடை வெப்பத்தால் உயிர் இழந்தோர் எண்ணிக்கையும் கொரோனா மரண எண்ணிக்கையில் காட்டி இருக்கவும் வாய்ப்புள்ளது.  என்னைப் பொறுத்தவரை கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 20000 லிருந்து 30000 வரை மட்டுமே இருந்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.