கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாத நிலையில் மும்பையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி இருக்கி றார். வீட்டில் போரடிக்காமல் இருக்க உடற்பயிற்சி, சமையல் என நேரத்தை கழித்தார். மேலும் ஊரடங்கு தளர்வில் டிரெக்கிங் சென்றார்.


தமன்னா இன்று டிவிட்டரில் ஒரு ஷாக் மெசேஜ் வெளியிட்டார். அதில்,’என் பெற்றோருக்கு கொரோனா அறிகுறி தெரிந்தது. உடனே குடும்பத்தில் எல்லோரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். அதற்கான ரிசல்ட் வந்தது. எதிர்பராதவிதமாக எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று பாசிடிவ் என தெரியவந்தது. உடனடியாக தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. குடும்பத்தில் நான் உள்பட யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்தது. கடவுள் அருளாளும் உங்கள் பிரார்த்தனை, ஆசியாலும் என து பெற்றோர் குணம் அடைவார்கள்’ என கூறி உள்ளார்.


கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாக கூறப்பட்டாலும் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பிரபல நடிகர்கள் அமிதாப்பச்சன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா மற்றும் நடிகர் விஷால், கருணாஸ், ஐஸ்வர்யா அர்ஜூன் போன்றவர்கள் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர்.