சிலருக்கு சிறுவயதில் ஏற்பட்ட காயங்கள் ஆறாத தழும்புகளாக மாறி அதுவொரு அடையாள குறியாக மாறிவிடுகிறது. இன்னும் சிலருக்கு பிறக்கும்போது சில வடுக்கள் ஏற்படுவதுண்டு, அதுபோல் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு இடது கண்ணில் ரத்த கசிவு போல் ஒரு வடு பிறக்கும் போதிலிருந்தே இருக்கிறது.


இதுநாள்வரை அவரை நெருக்கமாக பார்த்தவர் களுக்கு மட்டுமே இந்த வடுபற்றி தெரியும் தற்போதே அவரே நெருக்கமாக கண்ணை புகைப்படம் எடுத்து வடு இருப்பதை சுட்டிக் காட்டி., ’பிறந்த போது சில அடையாளங்கள். என் கண்ணில் இருந்தது, அது நோய் அல்ல. பொது வானது. என்னைப் பொறுத்த வரை அது சூப்பர் ஸ்பெஷல். இதுபோன்ற வடுக்கள் அழகானவை. அப்படி உள்ளவர்கள் அதை கொண்டாட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.