சில தினங்களுக்கு முன் பெங்களுரில் டிவி நடிகை உள்ளிட்ட சிலரை போதை மருந்து தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்தபோது கன்னட திரையுலகில் போதை மருந்து பயன்படுத்தபடுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பிரபலங்களின் பெயர்கள் அடங்கிய டைரியும் சிக்கி இருக்கிறது.
இதையடுத்து போலீசார் விசாரணைஒயை தீவிரப்படுத்தி உள்ளனர். கன்னட நடிகை ராகினி திவேதியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தமிழில் நிமிர்ந்து நில் தமிழ் படத்தில் நடித்துள்ளார். தற்போது மற்றொரு நடிகை பெயர் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருபவர் நிக்கி கல்ராணி. இவரது சகோதரி சஞ்சனா கல்ராணி. கன்னட படங் களில் நடிக்கிறார். தமிழிலும் ஒரு படத் தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். போதை மருந்து விவகாரத்தில் சஞ்சனா பெயரும் பரபரப்பாக பேசப்படுகிறது ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்தருக்கும் சஞ்சனாவுக்கு பல சொந்த வீடுகள், அபரிமிதமான சொத்து எப்படி வந்தது என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு சஞ்சனா தனது இணைய தள பக்கத்தில் பதில் அளித்திருக் கிறார்.
நடிகை சஞ்சனா கல்ராணி கூறியிருப்பதாவது:
கன்னடத் துறை போதைப்பொருள் விவகாரம் குறித்து பேசுமாறு என்னிடம் இடைவிடாது பத்திரிகையாளர்கள் சிலர் கேட்கின்றனர். எனது வருமானம் மற்றும் சொத்துக்கள் குறித்து சிலர் கேள்வி எழுப்பு கின்றனர். அதுபற்றி வருமான வரித்துறை கேள்வி எழுப்பினால் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். எனது ஊடக நண்பர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது எனக்குப் பிடிக்க வில்லை.
நான் கதாநாயகியாக ஒரே ஒரு படம் செய்துள்ளதாக என்னை மறைமுகமாக குறிப்பிட்டு பேசுவதை கேட்டேன். இது வருத்தமாக இருக்கிறது அப்படி பேசிய வர் தயவுசெய்து எனது விக்கி பீடியாவை பார்த்தால் தெரியும் கன்னடத்தில் சிவண்ணா, தர்ஷன் சார், பவன் கல்யாண் சார், பிரபாஸ் ராஜு, மோகன்லால் சார், மம்முட்டி சார் படங்கள் உள்ளிடோருடன் 43 படங்கள் மற்றும் பிக் பாஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி ஷோக்கள் நான் செய்துள்ளேன்.
எனக்கு ஒரு வீட்டை விட அதிகமாக உள்ளது என்றால் அது கடவுள் ஆசிர்வாதம். 16 வயதிலிருந்தே திரையுலகில் நான் இருக்கிறேன். என்னிடம் உள்ள ஒவ்வொரு பைசாவுக்கும் என்னிடம் கணக்கு உள்ளது. அதேபோல் எனது ஒவ்வொரு சொத்தும் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
போதை மருந்து அனுபவம் எனக்கு இல்லை. தெரியாத ஒன்றைப் பற்றி பேச சொல்லி கேட்பது எனக்கு எரிச்சலூட்டு கிறது. கன்னட திரையுலமை மருந்து விவகாரத்தில் சம்பந்தப்படுத்தி இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது கன்னட திரையுலகம் எனக்கு ஒரு கோயில்,
இவ்வாறு சஞ்சனா கல்ராணி கூறி உள்ளார்.