90 களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி சினிமாக்களில் கவர்ச்சி தாரகையாக வலம் வந்தவர் ரம்பா.
கார்த்திக்குடன் ஜோடியாக நடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படம் ரம்பாவை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

இதன் பின்னர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய கதாநாயகர்களுடன் நடித்த அவர், நடிப்பில் பிஸியாக இருந்த போதே, திருமணம் செய்து கொண்டார்.
கனடாவில் தொழில் செய்து வரும் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
அவர்களில் லான்யா என்ற மகளுக்கு அண்மையில் 10 வது பிறந்த நாள் ஆகும்.
மகளின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை ரம்பா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த பிறந்த நாள் எங்கு, எப்போது கொண்டாடப்பட்டது என்பது தெரியவில்லை.
– பா. பாரதி
[youtube-feed feed=1]