ஜெயம் ரவி நடித்த ’நிமிர்ந்து நில்’ படத்தில் நடித்தவர் கன்னட நடிகை ராகினி திவேதி. சமீபத்தில் பெங்களூரில் போதை மருந்து விற்றதாக டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலரை குற்றப்பிரிவு போலீசர் கைது செய்தனர். இதையடுத்து கன்னட திரையுலகில் சில நடிகர் நடிகை கள் போதை மருந்து பயன்படுத்துவதாக தகவல் வெளியானது. கைதானவர்களில் ராகினியின் நண்பர் ரவி என்பவரும் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது ராகினி திவேதி பற்றி தகவல் கிடைத்தது.
இதையடுத்து குற்றப்பிரிவு (சிசிபி) போலீஸார் ராகினியை விசாரணைக்கு அழைத்தனர். அவர் போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜரானார். ராகினி போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்டது குறித்து விசாரிக்கப்படுகிறார். தற்போது அவரை போலீசார் கைது செய்ததாக தகவல் பரவி வருகிறது.


சில தினங்களுக்கு முன் கூடிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கன்னட திரையு லகில் போதை பயன்பாடு இல்லை. குற்ற வாளிகள் என நிரூபிக்கப் பட்ட நடிகர்கள் மீது திரைப்பட வர்த்தக அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தது.
திரைப்பட தயாரிப்பாளரின் சங்க தலைவர் ஜெயராஜ் கூறும்போது,’எந்தவொரு தயாரிப்பாளரும் போதை பொருள் மோச டியில் ஈடுபடும் நடிகர்களை நடிக்க ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்றார்.