லப்புழா

தேசிய விருது பெற்ற மலையாள நடிகை  பார்வதி மேனன் விபத்தில் சிக்கினார்.

கேரள திரை உலகின் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் பார்வதி மேனன்.   மலையாள திரைப்படமான டேக் ஆஃப் படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.   பார்வதி தமிழ்ப்படஙக்ளான பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடைத்துள்ளார்.

நேற்று ஆலப்புழா அருகில் நடிகை பார்வதி காரில் சென்றுக் கொண்டிருந்தார்.   ஆலப்புழா அருகில் உள்ள கொம்முடி தேசிய நெடுஞ்சாலையில் பார்வதி பயணம் செய்துக் கொண்டிருந்த கார் மீது மற்றொரு கார் மோதி உள்ளது.

இந்த விபத்தில் பார்வதி உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது.   இது குறித்து ஆலப்புழா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.