சென்னை

கும்கி  திரைப்படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன் தற்போது, மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்க உள்ளார்.

சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கொம்பன்,  நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். மிருதன் படத்திற்கு பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள லஸ்மிமேனன்,  தமிழில் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்க உள்ளார்.  

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு  படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.