பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் முன் அரைகுறை ஆடையுடன் வந்து பாடம் நடத்தியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பானது.
காவல் துறையில் அவர்மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த விவகாரத்தை சாதிய அடிப்படையில் அணுகுவதாக பத்ம சேஷாத்ரி பள்ளி அறங்காவலர் மதுவந்தி கூறியதை தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சை ஆனது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகை குட்டி பத்மினி, இந்த பள்ளியில் கழிப்பறை முதல், மாணவிகளை தரக்குறைவாக அனைவர் முன்னிலையிலும் பேசுவது வரை அனைத்து விதமான அத்துமீறல்கலும் நடக்கிறது.
இது போன்ற பள்ளிகளை கண்காணிக்க அரசு ஒரு சிறப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும், மாணவர் நலனில் அக்கறை இல்லாமல் இதுபோல் சாதியை வைத்து அரசியல் செய்ய கூடாது என்று பத்திரிகை டாட் காம் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
நடிகை குட்டி பத்மினி பேட்டி வீடியோ….