தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பூ, அண்மைக்காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையே அரசியலிலும் பிரபலமாக இருந்த அவர், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
இந்நிலையில் அவர் ஏற்கனவே நடத்தி வரும் அவ்னி சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் புதிய சீரியல் ஒன்று தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தயாரிக்கும் குஷ்பு, முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவரின் அவ்னி சினிமாஸ் தயாரித்த நாடகங்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.