நடிகை கத்ரீனா கைஃப் – நடிகர் விக்கி கௌஷல் ஜோடிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகில் சொகுசு விடுதியாக செயல்பட்டு வரும் 14 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘சிக்ஸ் சென்ஸஸ்’ பார்வாரா கோட்டையில் டிசம்பர் 9 ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
இதற்காக மும்பையில் இருந்து இன்று ஜெய்ப்பூர் சென்ற கத்ரீனா அணிந்திருந்த மஞ்சள் நிற ஷராரா உடையின் விலை அதன் வடிவமைப்பாளர் முதற்கொண்டு திருமணம் நடக்க இருக்கும் சொகுசு விடுதி வரை பலவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அதிக கவனம் பெற்ற அவரது மஞ்சள் நிற ஷராரா-வின் விலை குறித்து அதை வடிவமைத்த அனாமிகா கன்னா ஏதும் கூறவில்லை என்ற போதும், இதே போன்ற ஆடையை இதற்குமுன் வடிவமைத்த அனாமிகா அதற்காக 1.5 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.
அதேபோல் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளில் அணியும் ஆடை அணிகலன்களை அனைத்தா ஷராப் அட்ஜானியா வடிவமைத்திருப்பதாக கூறப்படுகிறது.
Salman Khan, Arbaaz Khan & Sohail Khan on their way to gatecrash Vicky Kaushal & Katrina Kaif's wedding.#VickyKatrinaWedding pic.twitter.com/rKjroPFzeo
— Aditya Mantry (@aditya_mantry) December 4, 2021
திருமண நிகழ்ச்சிக்கு முக்கிய குடும்ப உறுப்பினர்கள் 120 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
Vicky Kaushal going to marry Katrina Kaif at 7 December ✔️
Salman be like: pic.twitter.com/M6woBWxGSM
— Parth Patel (Modi Ka Parivar) (@Parth_b97) November 27, 2021
கத்ரீனா கைஃப் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவரது முன்னாள் நண்பர்களான சல்மான் கான், ரன்பிர் கபூர் ஆகியோர் குறித்த மீம்ஸ்களையும் ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.