நடிகை கஸ்தூரி புதிய திரைப்படம் ஒன்றில் உள்துறை செயலாளராக நடிக்கிறார்.

வனஜா ஐ.ஏ.எஸ். ஆக தோன்றும் நடிகை கஸ்தூரியின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

90 களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய திரையுலகை கலக்கி வந்த நடிகை கஸ்தூரி திருமணத்துக்கு பின் சினிமா உலகை விட்டு விலகி இருந்தார்.

2009 ம் ஆண்டு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த கஸ்தூரி கடைசியாக 2020 ம் ஆண்டு வெளிவந்த வெல்வெட் நகரம் படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஐந்து படங்களில் கமிட்டாகி இருக்கும் கஸ்தூரி ‘கருட சுற்று’ என்று பெயரிடப்பட்டிருக்கும் படத்திற்காக வனஜா ஐ.ஏ.எஸ். ஸாக நடித்து வருகிறார்.