நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தி ருக்கிறார். முன்னணிநடிகர்களுடன் நடித்திருக்கும் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் நடித்தி ருக்கிறார். காஜல் அகர்வால் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் அவரது தங்கை நிஷா அகர்வாலுக்கு சில வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆகி குழந்தையும் பிறந்துவிட்டது.
காஜலுக்கு திருமணம் எப்போது என்று கேட்டுவந்தனர். அவரும் அதுபற்றி உரிய பதில் அளிக்காமல் மழுப்பி வந்தார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்காலும் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தாலும் தடைபட்டிருக் கிறது.
இதற்கிடையில், காஜலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதில் தெலுங்கு பட தயாரிப்பாளர் பெல்லங்கொண்டா ஶ்ரீனிவாஸ் கலந்துகொண்டதாக சொல் லப்படுகிறது. மணமகனின் பெயர் கவுதம். அவர் தொழிஅதிபராக இருக்கி றார் . இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்ய குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.