தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.
இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.
தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பட தொழிலாளர்கள் மீண்டும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்துவரும் நிலையில், தயாரிப்பாளர், இயக்குநர், மூத்த நடிகை ஜெயசித்ரா அவர்கள் 1000-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற வீட்டிற்கு தேவையான அடிப்படை பொருட்களை வழங்கி உதவினார்.
Amid the Corona situation, Veteran Actress Kalaimamani Dr #Jayachitra Amma distributed essential items directly to 1,000+ Members in Nadigar Sangam Association this morning.#StayHomeStaySafe @PRO_Priya @spp_media pic.twitter.com/8Av79nLOKL
— Ramesh Bala (@rameshlaus) May 22, 2021