சென்னை

நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் பாஜகவின் வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்தும் தனக்குக் கட்சியில் ஆதரவு இல்லை எனக்கூறி, நடிகை கவுதமி அக்கட்சியில் இருந்து விலகினார். நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடிகை கவுதமி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

நடிகை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். அதன் பிறகு நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது,

“அதிமுக தான் மக்களுக்காகப் பணி செய்வதற்குச் சரியான இடம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. நான் சுமார் 25 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் இருந்தேன்  பிறகு சில நாட்களுக்கு முன்பு ஒரு சில காரணங்களுக்காக அக்கட்சியில் இருந்து விலகினேன்.

நல்ல காரணங்களுக்காகவும், சரியான காரணங்களுக்காகவும், சரியான நேரத்தில் இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். நான் அண்ணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் இறங்கி வேலை செய்வேன் என்பது உங்களுக்குத் தெரியும். ரசியலில் எனது செயல்பாடு  இதுவரை அவ்வாறுதான் இருந்துள்ளது. இனி இன்னும் தீவிரமாக பணியாற்றுவதற்கு ஒரு சரியான இடம் எனக்கு கிடைத்துள்ளது என நம்புகிறேன்.”

என்று நடிகை கவுதமி தெரிவித்தார்.