சென்னை

போதை  பொருளுடன் கைது செய்யப்பட்ட துணை நடிகை மீனாவை 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்ணா சாலை காவல்துறையினருக்கு சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே ஒரு பெண் மெத்தபெட்டமைன் விற்பதாக நேற்று தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளம் பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

அந்த பெண் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததையடுத்து அவரது பையை சோதித்தனர். பையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் இருந்தது. காவல்துரையினர் போதைப்பொருளை பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசார்ன்ணையில், அந்த இளம்பெண் கோவிலம்பாக்கம் அருகேயுள்ள வெள்ளக்கோயில் கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த கா. எஸ்தா் (எ) மீனா (28) என்பதும், இலங்கையை பூா்விகமாகக் கொண்டவா் என்பதும் தெரியவந்தது. துணை நடிகை மீனா, தமிழ்த் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை தொடா்களில் நடித்து வருவதும், அவருக்கு ராயப்பேட்டையைச் சோ்ந்த ஜேம்ஸ் (27) என்பவா் மெத்தபெட்டமைன் வழங்கியதும் போலீசாருக்கு தெரியவந்தது.

அவரை கைது செய்த காவல்துறையினர் மீனா மூலம் திரைப்படக் கலைஞா்களுக்கு போதைப் பொருள் விற்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடிகை மீனாவுக்கு மெத்தபெட்டமைனை வழங்கியதாகக் கூறப்படும் ஜேம்ஸையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துணை நடிகை மீனா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரை வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற காவலையடுத்து துணை நடிகை மீனா சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.