வயநாடு
வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் வாடும் மக்களுக்கு பல நடிகர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.

கடந்த 29ஆம் தேதி கேரளா மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து மூன்றுமுறை நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு கிராமங்களே முழுதுவமாக சகதியில் மூழ்கியுள்ளது.. இதுவரை 290-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.
கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் விக்ரம் ரூ. 20 லட்சம் நிதியுதவி அளித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்
இதைப் போல் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகர் பகத்ஃபாசில் மற்றும் அவரது மனைவி நடிகை நஸ்ரியா நசிம் இருவரும் ரூ.25 லட்சம் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]