சென்னை:

டிகர் சங்க தேர்தலை  எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதி மன்றம்,  வேறு இடத்தை தெரிவிக்கும்படி நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில், 23ந் தேதி, நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. அதே நாளில்,  எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில்  எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளார்.

இதன் காரணமாக நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவது சர்ச்சையானது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையில் போட்டியிடும் பாண்டவர் அணி, நடிகர் சங்க தேர்தலை நிறுத்த சதி நடந்து வருகிறது என்றும்,  நடிகர் சங்க தேர்தல் நடத்தும் இடத்தை தேர்வு செய்தது, தேர்தலை நடத்தும் ஓய்வு பெற்ற நீதிபதி தான்  என்று குறிப்பிட்டார்.

மேலும்,  அரசியல் பின்னணி இல்லாமல் நடிகர் சங்க தேர்தல் நடக்கும் என நம்புவதாக தெரிவித்த வர்,  எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றிருப்பது அரங்கத்தில் மட்டும் தான், அதனால் தேர்தல் நடத்துவதில் தடை இருக்காது என கூறினார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என  கூறியுள்ளது.

மேலும்,  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத இடத்தை நாளை தெரிவிக்க நடிகர் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.