
இந்தி திரையுலகில் மூத்த நடிகர் யூசுப் ஹுசைன் (73) கொரோனாவால் காலமானார். சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், இன்று (30.10.2021) காலை சிகிச்சை பலனின்றி யூசுப் ஹுசைன் உயிரிழந்துள்ளார்.
இதனை இயக்குநரும், யூசுப் ஹுசைனின் மருமகனுமான ஹன்சல் மேத்தா தனது சமூகவலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். நடிகர் யூசுப் ஹுசைன் மறைவுக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
‘தபாங் 3’, ‘ஓ மை காட்’, ‘தூம் 2’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel