சென்னை:

நெடுவாசல் போராட்டத்தில் மக்களுக்கு ஆதரவாக கலந்துகொண்ட அனைவருக்கும் நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக, ஜெம் நிறுவனம் மத்திய பெட்ரோலியத்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. இதன் காரணமாக கடந்த 1 வருடத்திற்கும் மேலாக நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தக்கொரி அந்த பகுதி மக்களுடன் இணைந்து  மற்ற மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் போராடி வந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளது.  மேலும், நெடுவாசல் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட முடிவு செய்துள்ளதாக வந்த செய்தி மகிழ்ச்சி தருகிறது என்று கூறி உள்ளார்.

ஏற்கனவே நடிகர் விஷால், விவசாயத்துக்கு ஆதரவாகவும், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டங் களை அறிவித்திருந்தார். தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை கோரி பசுமை தீர்ப்பாயத்தில் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.