நேற்று தமிழக முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இறந்ததால் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது பல பிரபலங்கள் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர் நேரில் வர முடியாதவர்கள் அவருக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர்.
இன்று நடிகர் விக்ரம் நியூயார்க்கிலிருந்து தனது இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார், அதில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இறந்தார் என்ற செய்தி கிடைத்ததும் மிகுந்த சோகத்தில் அழ்ந்துவிட்டேன். அவர் சிறந்த தலைவி மட்டுமல்ல அவர் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு வழிகாட்டி. இவரை தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய நாடே இழந்துள்ளது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். என்று அதில் கூறியுள்ளார்.
இதை பார்த்த சிலர் அவரை அடக்கம் செய்த பின்னர் எதுக்கு இந்த செய்தி என்று அவரை கிண்டல் செய்து வருகின்றனர். அதற்கு அவர் நான் இந்தியாவில் இல்லை இப்போது நான் நியூயார்க் நகரில் உள்ளேன் இதனால் தான் அவரின் இறுதி சடங்குக்கு வர முடியவில்லை என்று விளக்கம் கூறியுள்ளார் நடிகர் விக்ரம்.
நடிகர் விக்ரம், ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வராததை சிலர் விமர்சனம் செய்தனர். தான் நாட்டில் இல்லை என விளக்கம் அளித்திருக்கிறார்.